அதிகரிக்கும் தாகம்… பெற்றோல்!

மனிதனின் கண்டுபிடிப்பில் பெறுமதியான ஒரு கண்டுபிடிப்பாக இன்றும் என்றும் கருதப்படக்கூடியது, கறுப்புத்தங்கம் என அழைக்கப்படும் பெற்றோலியத்தின் கண்டுபிடிப்பே !

கொரோவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் இந்தக் கொடிய சூழ்நிலையில் பெற்றோலியத்தின் விலையேற்றத்தைப் பொறுத்தே மக்களின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகளின் விலையேற்றங்கள் ஏற்றம் இறக்கம் காண்கின்றன. என்றால்  மக்களின் வாழ்வியலில் அவை எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது, வெள்ளிடை மலையாகின்றது. உலகத்தில் பெற்றோலியத்தின் தேவைப்பாடு உணரப்பட்டு கி.பி 1859 ஆம் ஆண்டு  முதலாவது எண்ணெய்க்கிணறு ஜக்கிய ராட்சியத்தில் தோண்டப்பட்டாலும், 150 ஆண்டுகளுக்குள்தான் அதன் முழு வரலாறும் அடங்குகின்றது.

அனைத்து நாடுகளுமே அதிகரித்துச் செல்லும் எண்ணெய்த்தாகத்துடனேயே தினமும் தமது நாள்களை ஆரம்பித்துக்கொண்டு இருக்கின்றன. ஜக்கிய ராட்சியத்தின் EIA (Energy Information Administration) இன் புள்ளிவிபரத்தின் படி, 2020 ஆம் ஆண்டு நாளொன்றிற்கு உலகம் முழவதும்  92.3 மில்லியன் பெரல்களாக இருந்த பெற்றோலியத்தின் பாவனை 2021 ஆம் ஆண்டு 97.7 மில்லியன் பெரல்களாக அதிகரித்துள்ளது.இந்நிலை தொடருமாயின் 2022 ஆம் ஆண்டு 101.4 மில்லியனாக அதிகரிக்கும் என அந் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அதிக பெற்றோலியத்தைப் பயன்படுத்தும் நாடுகளில் United States முதல் இடத்திலும் இந்தியா 3 ஆவது இடத்திலும் இலங்கை 73 ஆவது இடத்திலும் தமது இருப்பை தக்கவைத்துக் கொண்டு உள்ளன.இலங்கையில் மட்டும் நாளொன்றுக்கு 1லட்சத்து 27 ஆயிரத்து 800 பெரல் பெற்றோலியம்; தினம் ஒன்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது.ஒரு பெரல் என்பது 158.98 லீற்றர்களுக்கு சமனாகும்இவ்வாறு, அடிப்படைத் தேவைக்கான குடும்பத்தில் புதிதாக இணைந்திருக்கும் பெற்றோல் இலங்கை வாழ் மக்களுக்கு விலைக்கேற்ப நியமமான முறையில் கிடைக்கின்றதா? இல்லையா? ஏன்று  எப்போதாவது ஆராய்ந்துள்ளீர்களா ?

இது தொடர்பாக அக்வைனஸ் கல்லூரியின் ஊடக மாணவர்களாகிய நாம் உண்மைத் தன்மைக்கான ஒரு தேடலைத் ஆரம்பித்தோம். இதற்காக நாங்கள் எரிபொருள் நுகர்வு அதிகமான இருக்கும் யாழ்ப்பாணம் தொடக்கம் கொடிகாமம் வரையான பகுதியை புவியியல் பிரதேசத்தை எடுகோளாக எடுத்துக்கொண்டோம். இதற்காக நாங்கள் தேர்ந்தெடுத்த பொழுது காலை. ஏனெனில் அதிக வெப்பம் எமது ஆய்வி;ல் செல்வாக்கு செலுத்தி விடக்கூடாது என்ற எண்ணக்கருவே… இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக 1 லீற்றரை விட அதிக கொள்ளளவு உடைய போத்தலையே பெற்றோலைக் கொள்வனவு செய்யத் தெரிவு செய்தோம்.உழைப்பாளர் தினத்தில் ஆய்வின் பயணமானது காலை 8 மணிக்கு ஆரம்பித்து 3 மணத்தியாலங்களுள் 10 ஆவது தெரிவு எரிபொருள் நிலையமான கொடிகாமத்தில் முடிவடைந்தது. நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் நியம அளவைச் சோதிக்கிறீர்களா ? என எரிபொருள் நிலைய முகாமையாளர்கள்.ஊழியர்கள் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினார்கள்.

பெரும்பாலான இடங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கான அனுமதிகள் மறுக்கப்பட்டன. இருந்தும் 4 நிலையங்கள் மட்டுமே இதற்கான அனுமதியை அளித்தன. ஊடகநிறுவனத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிலையங்களில் கூட  ஊடகத்தைக் காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டமை எமது தேடலிற்கான ஆதாரங்களைத் திரட்டுவதில் தடங்கல்களாக அமைந்தன. சரியான அளவை மேற்கொள்வதற்காக 1லீற்றர், 100 மில்லிலீற்றர் அளவுக்குடுவைகள் தெரிவு செய்யப்பட்டன. ஆய்வின் படி 2 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே 1 லீற்றர் பெற்றோலின் விலைக்கு அதிகமான அளவு பெற்றோல் விநியோகிக்கப்படுகின்றன. மிகுதி 8 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 40- 60 மில்லி லீற்றர் குறைவாகவே பெற்றோலை விநியோகிக்கின்றன. ஆகவே இலங்கை முழுவதும் 1, 386 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1, 236 அரச நிலையங்களாகவும் 150 தனியார் நிலையங்களாவும் உள்ளன என CEYPETCO வின் இணையத்தளம் தெரிவிக்கின்றது. ஆய்வின் முடிவின் படி 80 வீதமானவை அதாவது 1, 109 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், ஏறத்தாள 50 மில்லிலீற்றர் பெற்றோலை விலைகேற்ப நியமமான அளவில் வழங்காது விடின்…..

தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நாம் பெற்ற தகவலின் படி தினம் ஒன்றிற்கு 4000 லீற்றர் பெற்றோல் ஒரு எரிபொருள் நிலையத்தில் நுகரப்படுகின்து எனக் குறிப்பிடுகின்றது. அவ்வாறெனில் நாளொன்றிற்கு ஒரு எரிபொருள் நிலையத்தில் மாத்திரம் 200 லீற்றர் பெற்றோல் மோசடி செய்யப்படுகின்றனவா? அவ்வாறெனில்…நாளொன்றிற்கு இலங்கையில் உள்ள 80 வீதமான ,1109 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் மோசடி செய்யப்படக் கூடும். மாதம் ஒன்றில் 66 லட்சத்து 54 ஆயிரம் லீற்றர். வருடம் ஒன்றில் 242 கோடியே 87 லட்சத்து 10 ஆயிரம் லீற்றர்கள் ஆகும். இதுவே இலங்கை பெறுமதியின் படி  33ஆயிரத்து 273 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரம் ருபாய்கள் ஆகும். ஏறத்தாள  33 பில்லியன் ருபாய் பணம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோசடி செய்யப்படுகின்றனவா?

அவ்வாறு எனில்…. மண்ணெண்ணெய், டீசல் என்று இந்த மோசடி தொடர்ந்தால் …??

  • 2021 – Journalism Students

Leave a Reply

Text Widget

The specifically planned sequence of instruction at Aquinas College is all about students experience in terms of our instructional goals. It is not only about academic stuffs, it also considering the extra curricular activities and personal development aspects.

Our Works

Recent News

Importance of learning English Language
July 26, 2021
Importance of learning Chinese Language
July 26, 2021
Creating powerful virtual learning trips
July 26, 2021